வினேஷ் போகத் வழக்கு மூன்றாவது முறையாக ஒத்தி வைக்க என்ன காரணம்? வழக்கறிஞர் சொன்ன தகவல்..!!
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
50 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத்துக்கு எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் வினேஷ் போகத் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 50 கிலோ எடை பிரிவு பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். போட்டியின்றி அவர் தங்கப் பதக்கம் பெறுவார். வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கம் அறிவித்திருந்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வினேஷ் போகத் விளையாட்டிற்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது, இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டியின்போது அவரின் எடை சரியாக இருந்தது என்றும், இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே எடை கூடியதால், தகுதி நீக்கம் செய்தது தவறு எனவும் அவரது தரப்பில் ஆஜரான இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்தார். எனவே, வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்றும் தனது வாதத்தை முன்வைத்தார்.
இச்சூழலில் வினேஷ் போகத் தொடரப்பட்ட வழக்கில் நடுவர் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது. இந்நிலையில், எதற்காக இந்த வழக்கு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கனியா கூறுகையில், "நாங்கள் அனைவருக்கும் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். CAS-இன் தற்காலிகக் குழு 24 மணிநேரம் காலக்கெடுவைக் கொண்டுள்ளது. . கடந்த காலங்களில் நான் CASஇல் பல வழக்குகளில் வாதாடி உள்ளேன்.
CASIL வெற்றி விகிதம் என்பது மிகக் குறைவு. இந்த விஷயத்தில், நாங்கள் நடுவரிடமிருந்து மிக முக்கியமான முடிவை எதிர்பார்க்கிறோம். இது கொஞ்சம் கடினம்தான். ஆனால் ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். நாம் அனைவரும் வினேஷுக்காக பிரார்த்தனை செய்வோம். அவருக்கு ஒரு பதக்கம் கிடைக்கும் என்று நம்புவோம். ஒருவேளை, அவர் அதைப் பெற்றாலும், அவர் ஒரு சாம்பியன்" எனத் தெரிவித்துள்ளார்.
Read more ; ‘Work From Home’ அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்..!! மிஸ் பண்ணிடாதீங்க.. ரெடியா?