2024 ம் ஆண்டின் கடைசி; மார்கழி சோமவார அமாவாசை!. இந்த 7 பொருட்களை தானமாக கொடுத்தால் வெற்றியும், அதிர்ஷ்டமும் குவியும்!
Amavasai: அமாவாசையில் தானம் கொடுப்பது, மற்ற நாட்களில் கொடுக்கும் தானத்தை விட பல மடங்கு அதிக பலனை தரக் கூடியது. சில குறிப்பிட்ட பொருட்களை இந்த நாளில் தானம் கொடுத்தால் அது நமக்கு வெற்றிகளையும், அதிர்ஷ்டத்தையும் தேடித் தரும். அதோடு தெய்வீக அருளும், புண்ணிய பலனும் கிடைக்கும்.
இந்த ஆண்டி கடைசி அமாவாசை டிசம்பர் 30ம் தேதி திங்கட்கிழமை (இன்று) வருகிறது. அதனால் இதை சோமாவதி அமாவாசை என்கிறோம். இது அமாவாசை, திங்கட்கிழமையில் வருவது மிகவும் விசேஷமானதாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் பித்ருக்களை வழிபடுவதுடன் சில குறிப்பிட்ட பொருட்களை தானமாக கொடுப்பதால் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவை சேர்ந்து கொண்டே இருக்கும். அது மட்டுமின்றி, பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு, மறுபிறவி இல்லாத முக்தி நிலையை அடைய முடியும்.
திங்கட்கிழமையில் வரும் அமாவாசையில் புனித நதிகளில் நீராடி, தானம் வழங்குவது மிகவும் புண்ணிய பலனை தரும். இது மகாளய பட்சத்திற்கு முன்பு வரும் அமாவாசை என்பதால், இந்த அமாவாசை மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. இது முன்னோர்களின் ஆசிகளையும், தெய்வங்களின் அனுகிரகத்தை பெறுவதற்கும், விருப்பங்கள் நிறைவேற்றிக் கொள்வதற்குமான அற்புத நாளாகும். இந்த நாளில் எந்தெந்த பொருட்களை தானம் அளித்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அமாவாசையில் இல்லாதவர்களுக்கு உணவை தானமாக வழங்குவது மிக உயர்ந்த புண்ணியத்தை தரும். இது தவிர கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் ஆகியவற்றையும் தானமாக கொடுக்கலாம். இதனால் நாம் எதிர்பார்த்த வாய்ப்புகள் நம்மை தேடி வரும். நமக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
சோமவாரத்தில் வரும் அமாவாசை நாளில் புதிய ஆடைகள் அல்லது சிறிதளவு மட்டும் பயன்படுத்திய உடைகளை தானமாக கொடுக்கலாம். வசதி இல்லாதவர்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இது போன்ற உடைகளை தானமாக வழங்குவதால் அவர்கள் மன நிறைவடைவார்கள். இது நமக்கு மிகப் பெரிய புண்ணியத்தை சேர்க்கும்.
யாருக்காவது புனித நூல்கள் அல்லது ஆன்மிக நூல்களை வாங்கிக் கொடுப்பது, படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகம், பேனா போன்ற பொருட்களை தானமாக கொடுக்கலாம். பகவத்கீதை, உபநிஷதங்கள் போன்ற நூல்களை வாங்கிக் கொடுப்பதால் நமக்கு ஆன்மிக மற்றும் ஞானத்தின் பலன்கள் இரண்டு கிடைக்கும். இது கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவருக்கும் மிகப் பெரிய புண்ணியத்தை தரும்.
அமாவாசை அன்று சுத்தமான நெய்யை வாங்கி யாருக்காவது தானமாக கொடுக்கலாம். நெய் என்பது தூய்மை மற்றும் தெய்வீகத்துவமானதாகும். நெய், புனித சடங்குகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகும். இதனால் கோவில்களுக்கு நெய் வாங்கி தானமாக கொடுப்பது மிக உயர்ந்த தானமாக கருதப்படுகிறது.
வேறு எதுவும் கொடுக்க முடியவில்லை என்றால் எளிமடயாக உப்பு வாங்கி தானமாக கொடுக்கலாம். உப்பு, மங்கல பொருட்களில் ஒன்றாகவும், மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இது ஆன்மிக பலன்களையும், வாழ்வில் முன்னேற்றத்தை தரும். பாவங்களில் இருந்து விடுபட்டு, நன்மைகளை பெற உதவும்.
சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு அமாவாசை அன்று போர்வை, கம்பளி, பாய் போன்ற குளிருக்கு உதமான பொருட்களை தானமாக வழங்கலாம். இது நம்முடைய பித்ருக்களையும், சனி பகவானையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு தானமாகும். இது மிகவும் உயர்வான தானமாக கருதப்படுகிறது.
இல்லாதவர்களுக்கு பணத்தை தானமாக கொடுத்து உதவுவதால், அவர்களின் துன்பத்தை போக்குவதால் குடும்பத்தில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும். இது வாழ்க்கையில் வளர்ச்சியையும், தெய்வ அனுகிரகத்தையும் தரும். எடுக்கும் காரியங்களில் வெற்றியை தரும்.
Readmore: நோய் இல்லாமல் வாழ வேண்டுமா? அப்போ காலையில் இதை குடியுங்க.. டாக்டர் அட்வைஸ்..