கை நிறைய சம்பளம்.. நீங்க பேங்க் ஆபிசர் ஆகனுமா? 6,124 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விவரங்கள் இதோ..!
பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கான அறிவிப்பை, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்கும் தேதி பணியிடங்கள் குறித்த விவரங்கள் விண்ணப்பிக்கும் இணையதளம் பற்றிய தகவல்கள் அடங்கிய முழு விவரத்ததை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள க்ளெர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 6,000த்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் 665 காலி பணியிடங்கள் உள்ளன.
எஸ்.பி.ஐ வங்கியை தவிர்த்து நாட்டில் உள்ள இதர பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி , சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, பேங்க் ஆப் மகராஷ்டிரா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் நிரப்பி வருகிறது.
கல்வி தகுதி ;
ஏதேனும் துறையில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த கல்வித் தகுதி உள்ளவர்கள் ஜூலை 21ம் தேதிக்குள் www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இதற்கான வயது வரம்பு 20 வயது முதல் 28 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும். அதாவது 1996ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களும், 2004 ஜூலை 1ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாள்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 21.07.2024 ஆகும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை https://ibpsonline.ibps.in/crpcl14jun24/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more | பருவமழை கால வயிற்றுப்போக்கு!. குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க டிப்ஸ்!