'விமானத்தில் ஸ்டாண்டிங் செய்த நபர்!' மீண்டும் டெர்மினலுக்கே திரும்பிய இண்டிகோ விமானம்..
மும்பையிலிருந்து கிளம்ப இருந்த விமானம் ஒன்றில் நின்றபடி பயணித்த பயணியால் மீண்டும் விமானம் டெர்மினலுக்கே திருப்பப்பட்டது.
மும்பையில் இருந்து வாராணசி செல்லும் இண்டிகோ விமானம் நேற்று காலை 7.50 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச முனையத்தில் இருந்து புறப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் செல்லும்போது, விமானத்தில் ஆண் பயணி ஒருவர் இருக்கை இல்லாமல் பின் பகுதியில் நின்று கொண்டிருப்பதை விமான ஊழியர்கள் கண்டனர்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனேவிமானிக்கு தகவல் அளித்தனர். விமானம் டேக்-ஆப் ஆவதற்கு முன் இத்தகவல் விமானிக்கு கிடைத்தது. அவர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, இண்டிகோ விமானம் புறப்படும் முயற்சியை கைவிட்டு மீண்டும் டெர்மினலுக்கே திரும்பியது. நின்றபடி பயணித்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் தவறு வெளிப்பட்டது.
இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் "மும்பையில் இருந்து வாரணாசிக்கு செல்லும் பணிகளுக்கான இருக்கை ஒதுக்கீட்டில் ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது. காத்திருப்பு பட்டியலில் இருந்த ஒரு பயணிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “புறப்படுவதற்கு முன்பு இந்தத் தவறு கவனிக்கப்பட்டது. நின்றுகொண்டே சென்ற அந்தப் பயணி இறக்கிவிடப்பட்டார். இதனால் சிறிது தாமதம் ஏற்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தீவிரமடையும் டெங்கு..!! அறிகுறிகள் இதுதான்..!! எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை..!!