For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபியை வென்றது இந்திய அணி!… ஜப்பானை வீழ்த்தி வீராங்கனைகள் அசத்தல்!

09:20 AM Nov 06, 2023 IST | 1newsnationuser3
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபியை வென்றது இந்திய அணி … ஜப்பானை வீழ்த்தி வீராங்கனைகள் அசத்தல்
Advertisement

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Advertisement

மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இதற்கிடையில் நேற்று முன் தினம் நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்திய அணியும், ஜப்பான் அணியும் வெற்றி பெற்றன. முதல் அரையிறுதியில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவையும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் கொரியாவையும் வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. அதாவது, சங்கீதா 17-வது நிமிடத்திலும், நேஹா 46-வது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 57-வது நிமிடத்திலும், வந்தனா 60-நிமிடத்திலும் கோல் பதிவு செய்தனர். முதல் கால்பகுதி (First Quarter) ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை.

2-வது கால்பகுதி ஆட்டத்தில் சங்கீதா கோல் பதிவு செய்தார். 3-வது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. 4-வது கால் பகுதியில் மூன்று கோல்களை பதிவு செய்தது இந்தியா. இந்நிலையில், ஜார்க்கண்ட் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ராஞ்சி 2023-ல் வெற்றிபெற்ற அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் தலா ரூ. 3 லட்சமும், அனைத்து துணை ஊழியர்களுக்கும் தலா ரூ.1.5 லட்சமும் வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. கடந்த 2021-ல் நடைபெற்ற 6-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஜப்பான் அணி பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement