For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

T20 World Cup 2024 ; இந்திய ஜெர்சி அறிமுகம்

07:40 PM May 06, 2024 IST | Mari Thangam
t20 world cup 2024   இந்திய ஜெர்சி அறிமுகம்
Advertisement

அமெரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஜெர்சியை, இந்திய அணி அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நக

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பி.சி.சி.ஐ. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வீடியோவில், இந்திய அணி வீரர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது, ஹெலிகாப்டரில் ஜெர்சியை கொண்டுவருவது போலான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Advertisement