Forex: வரலாறு காணாத உச்சத்தை தொட்ட இந்திய பொருளாதாரம்!… அந்நிய செலாவணி கையிருப்பு 642.49 பில்லியன் டாலர்!
Forex: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் பெரும் ஏற்றம் பதிவாகியுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.396 பில்லியன் டாலர் அதிகரித்து 642.492 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 10.47 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 636.095 பில்லியன் டாலர்களை எட்டியது.
மார்ச் 15ம் தேதி நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 603 கோடி டாலர் உயர்ந்து 56,838 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 13 கோடி டாலர்கள் உயர்ந்து 469 கோடி டாலராக உள்ளது.
2021 அக்டோபரில் அந்நிய செலாவணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு $645 பில்லியன்களை எட்டியது. கடந்த ஆண்டு முதல், மத்திய ரிசர்வ் வங்கி, உலகளாவிய வளர்ச்சிகள் காரணமாக ஏற்படும் அழுத்தங்களுக்கு மத்தியில், ரூபாயின் மாற்று விகிதத்தை பராமரிக்க நாணய இருப்புக்களை பயன்படுத்தியது. இதனால் கரன்சி கையிருப்பு பாதிக்கப்பட்டது.
Readmore: Germany: அரவிந்த் கெஜ்ரிவால் கைது…! ஜெர்மனியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்…!