Alert..! வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 2 நாட்களுக்கு...! வானிலை மையம் தந்த எச்சரிக்கை...!
வட வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல, கடலோர ஆந்திர பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் இருப்பதால் கடலோர ஆந்திரா மற்றும் ராய்லசீமா ஆகிய வட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் செய்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தானில் அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.