For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Tax: வருமான வரிப் படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்..! இல்லை என்றால் சிக்கல்...!

06:30 AM Mar 11, 2024 IST | 1newsnationuser2
tax  வருமான வரிப் படிவத்தை வரும் 31 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்    இல்லை என்றால் சிக்கல்
Advertisement

புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, வருமான வரித் துறை, அதிக வருமான வரி திரும்பக்கோரும் (ரீபண்ட்) கோரிக்கைகளை ஆய்வு செய்யும் போது, சில வரி செலுத்துவோர் வழக்கத்திற்கு மாறாக வருமான வரிச்சட்டப் 80G பிரிவின் கீழ் நிதிகள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் போன்றவை அடங்கும், 80E பிரிவின் கீழ் கல்வி கடனுக்கான வட்டி மற்றும் 80GGC பிரிவின் படி அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட பங்களிப்புகள் பெரும் வரி விலக்குகளை, தங்களது 2021-22, 2022-23 & 2023-24ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிப்படிவத்தில் கோரியுள்ளனர். வரி செலுத்துவோர் சிலர், தங்களது மொத்த வருவாயில் 80%க்கும் அதிகமான வருமானத்தை வரி விலக்காக கோரியுள்ளனர்.

அத்தகைய வரி செலுத்துவோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பலராலும் தங்களது வருமான வரிப்படிவத்தில் அவர்கள் கோரிய வரிக் சலுகைகளின் உண்மைத் தன்மையை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களை வழங்க முடியவில்லை. இத்தகைய சூழலில், 1.4.2022 முதல் வருமான வரிச்சட்ட பிரிவு 139(8A)ன் கீழ் வழக்கமான மற்றும் காலதாமதமான வருமான வரிப்படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிவடைந்த பின்னரும், கூடுதல் வரியை செலுத்தி, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிப்படிவத்தைத் தாக்கல் செய்யும் போது ஏதேனும் பிழைகள் செய்திருந்தால், வரி செலுத்துவோர் அதை சரி செய்து, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை (ITR-U) தாக்கல் செய்வதன் மூலம், அந்தப் பிழைகளை திருத்தும் செய்துக்கொள்ளலாம் என்பது அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரப்படுகிறது. மதிப்பீட்டு ஆண்டு 2021-22க்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை (ITR-U) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி (அதாவது நிதி ஆண்டு 2020-21) 31.03.2024 ஆகும்.

Advertisement