முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புதிய பங்களாவை சுத்து போட்ட வருமான வரித்துறை..!! செந்தில் பாலாஜியின் சகோதரர் இல்லத்தில் சோதனை..!!

10:34 AM Jan 11, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்குச் சொந்தமான புதிய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடந்து அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்தாண்டு செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் புதிய பங்களா ஒன்றை கட்டி வருகிறார். அங்கு இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
சகோதரர் அசோக் குமார்செந்தில் பாலாஜிபுதிய பங்களாவருமான வரித்துறை
Advertisement
Next Article