முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வந்த சிறுவன்..!! தகாத வார்த்தை.. தனி அறையில் பூட்டி சித்ரவதை.. உ.பி.,யில் தொடரும் அவலம்... 

The incident of school management expelling a 7-year-old boy for bringing non-vegetarian food to school has caused great shock.
01:14 PM Sep 06, 2024 IST | Mari Thangam
Advertisement

பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வந்ததாக கூறி 7வயது சிறுவனை பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது.

Advertisement

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அசைவ பிரியாணி பள்ளிக்கு கொண்டு வந்த 7 வயது சிறுவனை பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கியது. தனது குழந்தையை வெளியேற்றியதற்கான காரணத்தை கேட்டு பள்ளி முதல்வருடன் சிறுவனின் தாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை செல்போனில் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அந்த வீடியோவில் பள்ளியின் முதல்வர் ' இந்த மாதிரி சிறுவர்கள் வளர்ந்த பிறகு கோயிலை இடிப்பார்கள். வரும் காலங்களில் கோயிலை இடிக்கும் இவர்களுக்கு என்னால் கல்வி கற்பிக்க முடியாது.' என தெரிவித்துள்ளார். மேலும் உணவுக்காக மாணவரை தரக்குறைவாகவும் , தகாத வார்த்தைகளைக் கூறியும் திட்டியுள்ளதாக மாணவனின் தாய் தெரிவித்துள்ளார். மேலும் மாணவனை தனி அறையில் பூட்டி வைத்து மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில் அம்ரோஹா முஸ்லிம் கமிட்டி பள்ளி முதல்வருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அம்ரோஹாவின் துணை மாஜிஸ்திரேட் சுதிர் குமார், அடிப்படை கல்வி அதிகாரி (BSA) மற்றும் பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளரிடம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் விசாரணையின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.' என துணை மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

Read more ; பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து..!! 17 மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம்.. கென்யாவில் சோகம்..

Tags :
non-vegetarian foodschool managementuttar pradesh
Advertisement
Next Article