முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடுரோட்டில் பதைபதைக்கும் சம்பவம்..!! சாதியை சொல்லி திட்டி கடுமையாக தாக்கிய காவலர்கள்..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

01:16 PM Nov 03, 2023 IST | 1newsnationuser6
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜா. இவரின் மனைவி மற்றும் மகனுடன், கடந்த 2016ஆம் ஆண்டு செங்கம் நகரின் பிரதான சாலையில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்து சண்டையிட்ட நிலையில், அங்கு வந்த காவலர்கள் இவர்களை சமூகப்பெயரை சொல்லி, அங்கிருந்து செல்லுமாறு கடுமையான தாக்கியுள்ளனர்.

Advertisement

காவல் உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார், விஜயகுமார் ஆகியோர் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் தாக்குதலை தாங்க இயலாத பெண்மணி, தனது கணவர் மற்றும் மகன் தாக்கப்படுவதை கண்டு அலறியது அங்கிருந்தோரை பதைபதைக்க செய்தது. இச்சம்பவம் தொடர்பாக ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, விசாரணை செய்த நீதிபதிகள் தற்போது சம்பந்தப்பட்ட 3 காவலர்களின் மீது வழக்குப்பதியாத செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறும், அதனை 3 காவலர்களிடம் இருந்தே வசூல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை முடியும் வரையில் மூவரையும் பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Tags :
காவலர்கள்சென்னை உயர்நீதிமன்றம்திருவண்ணாமலை
Advertisement
Next Article