அன்புள்ள அப்பா.. யாருமே உன்போல் இல்லை மண்மேலே..!! - 30 நிமிடத்தில் 6 பிரியாணி.. மகனின் சிகிச்சைக்காக போட்டியில் பங்கேற்ற தந்தை..!!
கோவை ரயில்வே ஸ்டேஷன் சந்திப்புக்கு வெளியே, ரயில் பெட்டி போல் ஓட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் செம்மனூரில் உள்ள நகைக்கடை உரிமையாளர் பாபி அதை குத்தகைக்கு எடுத்து ஓட்டல் தொடங்கியுள்ளார். கடை விளம்பரத்திற்காக அரை மணி நேரத்தில், ஆறு சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது.
அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.1 லட்சமும், நான்கு பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.50 ஆயிரமும், மூன்று பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.25 ஆயிரமும் பரிசு அறிவிக்கப்பட்டது. இதையறிந்த கோவை மற்றும் கேரளாவில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். இதில் பங்கேற்க ஏராளமானவர்கள் வந்ததால், ரயில் நிலைய சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸ் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போட்டியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், சாதாரணமாக ஹோட்டலில் கொடுக்கப்படும் ஒரு பிரியாணி அளவை போல், மூன்று மடங்கு இருந்தது. இதனால் அதிகம் உட்கொள்ள முடியவில்லை இதேபோல சிக்கன் பிரியாணி பாத்திரத்தில் அதிகளவு உணவை அமுக்கி வைத்து கொடுத்ததால் சாப்பிட முடியவில்லை. என்று வருத்தப்பட்டனர். இலவசமாக இளைஞர்களை கவரும் வகையில் போட்டி நடத்துவதால், ஹோட்டல் எளிதாக சென்றடையும் என்ற வியாபார யுக்தியின் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட 15 வயது மகனின் சிகிச்சைக்காக தந்தை ஒருவர் போட்டியில் கலந்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் உடல்நிலை குறித்து உருக்கமாக பேசினார். சின்ன வேடப்பட்டி பகுதியை சேர்ந்த கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வரும் இவர், தனது 15 வயது ஆப்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவனின் சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், போட்டியில் பங்கேற்றதாக உருக்கமாக பேசினார். அவரின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more ; ஆன்டிபயாடிக் மருந்துகளை திரும்ப பெறும் அபோட் இந்தியா..!!