முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி!! டீ போட்டு தராத மருமகள் கழுத்து நெரித்து கொலை! - மாமியார் கைது

The incident in Hyderabad where the mother-in-law strangulated her daughter-in-law for not giving her tea in a fit of rage has caused a great shock in the area.
11:52 AM Jun 28, 2024 IST | Mari Thangam
Advertisement

ஐதராபாத்தில் டீ தராத மருமகளை, ஆத்திரத்தில் மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள விகாரபாத் மாவட்டம் மோமின்பேட்டையைச் சேர்ந்தவர் அஜ்மீரா பேகம்(28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸ்க்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகம்(53) வசித்து வந்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், தனது மருமகள் அஜ்மீரா பேகத்திடம் டீ போட்டுத் தருமாறு ஃபர்சானா பேகம் நேற்று கேட்டுள்ளார். ஆனால், தேநீர் போட்டுத் தரமுடியாது என்று அஜ்மீரா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஃபர்சானா, அஜ்மீரா பேகத்தின் பின்னால் சென்று துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதனால் மூச்சுத்திணறி அஜ்மீரா பேகம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அத்தாப்பூர் காவல் நிலைய போலீஸார், விரைந்து வந்து அஜ்மீரா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக ஃபர்சானா பேகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read more ; கைது பீதியால் தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்!!  7 தனிப்படைகள் அமைத்து தீவிரம் காட்டும் சிபிசிஐடி!!

Tags :
Daughter in Law MurderHyderabadmother in law arrest
Advertisement
Next Article