For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தாய் வீட்டு சீதனத்தை விற்று மது குடித்த கணவன்..!! முதல் மனைவி வைத்த ட்விஸ்ட்..!! தொக்காக சிக்கிய 2-வது மனைவி..!!

The incident of the 2nd wife murdering the husband, who sold the anvil given to him by his mother and bought alcohol at the shop, has caused a shock.
04:55 PM Sep 18, 2024 IST | Chella
தாய் வீட்டு சீதனத்தை விற்று மது குடித்த கணவன்     முதல் மனைவி வைத்த ட்விஸ்ட்     தொக்காக சிக்கிய 2 வது மனைவி
Advertisement

தாய் வீட்டில் இருந்து சீதனமாக கொடுத்த சொம்பை, கடையில் விற்று மது வாங்கிக் குடித்த கணவரை 2-வது மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த விவசாயி நரசிங் யாதவ் என்பவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி புஷ்பா தேவியுடன் வாழ்ந்து வந்த நரசிங் யாதவ், 2-வதாக விமலா பாசி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவரது வீட்டில் நரசிங் யாதவ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கிய நிலையில், முதல் மனைவி புஷ்பா திடீரென போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

இதையடுத்து, யாதவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, யாதவ் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டாவது மனைவி விமலா பாசி, தனது கணவரை கழுத்தை நெரித்துக் கொண்டது அம்பலமானது. இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி பிரதீப் குமார் கூறுகையில், “நரசிங் யாதவ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

சம்பவ நாளில் வீட்டில் இருந்த சொம்புகளை விற்று மது வாங்கி குடித்துள்ளார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் இருந்த சொம்பை விற்று மது குடித்ததாக மனைவியிடம் போதையில் உளறியுள்ளார். இதையடுத்து, தனது தாய் வீட்டில் இருந்து சீதனமாக கொடுத்த சொம்பை விற்று மது குடித்தாயா? என்று கூறி, கணவரிடம் விமலா ​​வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது நடந்த சண்டையில் கணவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். இதையடுத்து, அவரிடம் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ’படம் நன்றாக இருந்தால் எல்லோரிடமும் கண்டிப்பாக சென்றடையும்’..!! வெற்றி மாறனின் சார் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!!

Tags :
Advertisement