முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இரவு படுக்கையறையில் காணாமல் போன மனைவி..! சுடுகாட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

07:35 PM Nov 21, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

சுடுகாட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலத்தின் பரலி மாவட்டத்தில் உள்ள கோடியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நேபால் சிங். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவிக்கு அதே கிராமத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

கணவருக்கு தெரியாமல் அந்த வாலிபருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார் நேபால் சிங்கின் மனைவி. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இரவில் குழந்தை மற்றும் கணவர் தூங்கிய நிலையில் யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலனை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் நேபால் சிங்கின் மனைவி. பிறகு கள்ளக்காதலுடன் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். மனைவியை படுக்கையறையில் காணாத நேபால் சிங் மனைவியை தேடி சென்றுள்ளார், அப்போது சுடுகாட்டில் தனது மனைவியும் கள்ளக்காதலனும் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கு எரிந்து கொண்டிருந்த ஒரு கட்டையை எடுத்து அவர்கள் மீது வீசி இருக்கிறார்.

இதில் சிறிய காயங்களுடன் கள்ளக்காதலன் தப்பி சென்று விட்டார். ஆனால் நேபால் சிங்கின் மனைவி தீக்காயங்களில் சிக்கி துடிதுடித்து இருக்கிறார். அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார் நேபால் சிங். மறுநாள் காலை சுடுகாட்டிற்கு சென்றவர்கள் தீக்காயத்துடன் இளம் பெண் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நேபால் சிங்கின் மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நேபால் சிங்கை கைது செய்துள்ள காவல் துறை அவரது மனைவியின் கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.

Tags :
affaircrimeillegal affairஉத்தரபிரதேசகள்ளக்காதலனுடன் உல்லாச
Advertisement
Next Article