For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குடும்ப பிரச்சனையில் வீட்டிற்கு தீ வைத்த கணவர்! தம்பதி உயிரிழப்பு!

11:02 AM Apr 14, 2024 IST | Mari Thangam
குடும்ப பிரச்சனையில் வீட்டிற்கு தீ வைத்த கணவர்  தம்பதி உயிரிழப்பு
Advertisement

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்பப் பிரச்சினையில் தீ வைத்ததில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். 

Advertisement

காரைக்குடி வைத்தியலிங்கபுரம் 2-வது வீதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். 60 வயதான இவர் தெருக்களில் டீ விற்கும் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி லதா(57). இவர்களது மூத்த மகன் நவீன்குமார்(35). திருமணமான நிலையில் தனது தாய், தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். தங்கராஜின் 2-வது மகன் ராஜேஷ், சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், தன்னை மனைவி சரிவர கவனிப்பதில்லை என்று தங்கராஜ் அடிக்கடி மனைவியிடம் தகறாரில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பிரச்னையில் நவீன்குமார் தனது தாயாருக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த நிலையில் இருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை தன் மீதும், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி லதா மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இருவர் மீதும் தீப்பற்றியதில், இருவரும் அலறினர்.

சப்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த நவீன்குமார், அவரது மனைவி செல்வி, ஒரு வயது மகன் ஆகியோர் வெளியே வந்தனர். தீப்பற்றியதைப் பார்த்ததும், செல்வி தனது மகனுடன் அவசரமாக வெளியேறினார். தங்கராஜ், லதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாயாரைக் காப்பாற்ற முயன்ற நவீன்குமாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

 80% சதவீத தீ காயத்துடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். தகவலறிந்து வந்த காரைக்குடி தெற்கு போலீஸார், தங்கராஜ், லதா ஆகியோரது சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement