For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலையிலேயே குடித்துவிட்டு காதல் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த கணவன்..!! கடைசியில் நேர்ந்த சோகம்..!!

Villupuram has been shocked by the incident where the husband beat up the newlywed who refused to have sex.
11:55 AM Jun 07, 2024 IST | Chella
காலையிலேயே குடித்துவிட்டு காதல் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த கணவன்     கடைசியில் நேர்ந்த சோகம்
Advertisement

உல்லாசத்திற்கு மறுத்த புதுப்பெண்ணை கணவனே அடித்துக்கொலை செய்த சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரணாமூரை சேர்ந்தவர் சுகுமார் (28). இவருக்கும், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கலந்தமேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவருக்கும் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சுகுமாருக்கு திருமணத்திற்கு முன்பே மது குடிக்கும் பழக்கம் இருப்பது மனைவி திவ்யாவுக்கு தெரியவந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். கணவர் சுகுமார் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று காலையில் ஃபுல் மப்பில் வீட்டிற்கு வந்து மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், சுகுமார் மதுபோதையில் இருந்ததால், திவ்யா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் திவ்யாவின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, கணவர் சுகுமார் அங்கிருந்து தப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுமாரை அதிரடியாக கைது செய்தனர். உல்லாசத்திற்கு மறுத்த புதுப்பெண்ணை கணவனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு..!! நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் ராகுல் காந்தி..!!

Tags :
Advertisement