'பிரிட்ஜில் மாட்டிறைச்சி' 11 வீடுகளை இடித்த கொடூரம்!! பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாண்ட்லாவில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாண்ட்லா காவல் கண்காணிப்பாளர் ரஜத் சக்லேச்சா தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் புகாரில் உண்மை இருப்பது தெரிந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளின் கொல்லைப்புறத்தில் 150 மாடுகள் கட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனை செய்தனர். அதில் 11 பேரின் வீடுகளிலும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது. பிடிபட்ட இறைச்சி மாட்டிறைச்சி என்பதை உள்ளூர் அரசு கால்நடை மருத்துவர் உறுதி செய்தார்.
அதனைத்தொடர்ந்து மாட்டிறைச்சி வைத்திருந்த 11 வீடுகளும் அரசு நிலத்தில் இருப்பதாக கூறி, இடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 பேர் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர்களை பிடிக்கும் பணி மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து மாண்ட்லா காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “குற்றவாளிகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் என்றும், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இத்தகைய குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் கைப்பற்றப்பட்ட 150 மாடுகளும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Read more ; மொபைல் இன்டர்நெட் ஸ்லோவா இருக்கா? ஹை ஸ்பீடு டேட்டாவுக்கு இதை ட்ரை பண்ணுங்க!