For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Mystery ship: 120 ஆண்டுகளுக்கு முன் புயலில் சிக்கி காணமால் போன கப்பல் கண்டுபிடிப்பு!… கொஞ்சம் கூட சேதமடையாத அதிசயம்!

02:22 PM Feb 28, 2024 IST | 1newsnationuser3
mystery ship  120 ஆண்டுகளுக்கு முன் புயலில் சிக்கி காணமால் போன கப்பல் கண்டுபிடிப்பு … கொஞ்சம் கூட சேதமடையாத அதிசயம்
Advertisement

Mystery ship: ஆஸ்திரேலியாவில் புயலில் சிக்கி மாயமான சரக்கு கப்பல் 120 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு கடந்த 1904 ஆம் ஆண்டு சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. 240 அடி நீளம் கொண்ட இந்த பிரமாண்ட சரக்கு கப்பல் புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. நியு சவுத்வேல்ஸ் கடல் பகுதியில் மாயமான எஸ் எஸ் நெம்சிஸ் என்ற இந்த நீராவி கப்பலை தேடும் பணியானது நடைபெற்றது.

அடுத்த சில நாட்களில் கப்பலில் பயணம் செய்தவர்கள் இறந்த நிலையில் சடலமாக கரை ஒதுங்கினர். ஆனால், கப்பல் எந்த இடத்தில் மூழ்கியது என்பது குறித்து மர்மமாகவே இருந்தது. பல ஆண்டுகளாக கப்பலை தேடியும் கிடைக்காததால், தேடும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில், கப்பல் மூழ்கி 120 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் மாயமான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிட்னி கடலோர பகுதியில் நீரில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் புரெஸ்சினல் மரைன் சர்வீஸ் என்ற நிறுவனம் ஈடுபட்டு இருந்தது. இந்த கப்பலை தேடும் பணியில் தேடும் நிறுவனம் ஈடுபட்ட போதுதான்.

120 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 525 அடி ஆழத்தில் கிடந்த கப்பல் 120 ஆண்டுகள் ஆகியும் அப்படியே இருந்ததை கண்டு ஆய்வாளர்கள் வியப்பு அடைந்தனர். எனினும், கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் எஸ் எஸ் நெமிசிஸ் -தானா என்பதை ஆஸ்திரேலிய அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை இந்த கப்பலை படம் பிடித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

English Summary: A mysterious cargo ship caught in a storm in Australia has been found after 120 years.

Readmore: 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Sony!… கதறும் ஊழியர்கள்!… காரணம் இதுதான்!

Tags :
Advertisement