'ஆருத்ரா, ஹிஜாவு மோசடி வழக்குகள்' இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? - உச்சநீதிமன்றம் அதிரடி!!
பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி சுருட்டி மிகப்பெரிய மோசடியை செய்த ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎப்எஸ் நிறுவனங்கள் தொடர்புடைய வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த மோசடி விவகாரத்தில் மோசடி நிறுவனத்தின் உரிமையாளர்கள், தலைமறைவானவர்களை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து பல கோடி ரூபாய் பணம், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முதலீடுகளைப் பெற்று, மோசடி செய்த நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்குகளின் விசாரணையை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி வழக்கு தொடுத்திருந்தார். இந்த மோசடி நிறுவனங்கள் மீதான வழக்குகளின் விசாரணை நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், நிதி மோசடி தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்றும் ஹிஜாவு, ஆருத்ரா மோசடி வழக்குகளில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, இந்த நிதி நிறுவன மோசடி வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Read more ; ‘பொக்கிஷம் மறைந்துள்ள பழமையான குகை..’ அங்க போன யாரும் உயிருடன் திரும்புனது கிடையாதாம்..!!