மூடநம்பிக்கையின் உச்சம்…! நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை…! உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர்!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடவுளை நம்புவதும் வணங்குவதும் தவறில்லை. கணிக்கை செலுத்துவதிலும் தவறில்லை. ஆனால், சில மூடநம்பிக்கைகளை அப்படியே கடைபிடிப்பதுதான் தவறு. அப்படியான ஒரு மூடநம்பிக்கை சம்பவம்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம், அஞ்சோரா காவல் சௌக்கி எல்லைக்கு உட்பட்ட தனாட் கிராமத்தில் ராஜேஷ்வர் நிஷாத் (33) என்பவர், கிராமத்தில் உள்ள குளத்துக்கு சென்றுள்ளார். அப்போது சில மந்திரங்களை ஓதிக் கொண்டு, அவர் தனது நாக்கை கத்தியால் வெட்டி குளத்தின் கரையில் ஒரு கல்லில் வைத்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷ்வரை கண்ட அப்பகுதி மக்கள்ஆம்புலன்ஸை வரவழைத்து, மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கிராமவாசிகள் தகவல் படி, ராஜேஷ்வர் நிஷாத்தின் மனைவி வாய் பேச இயலாதவர். மேலும் தனது சில அபிப்பிராயங்களை நிறைவேற்றுவதற்காக தனது நாக்கை வெட்டி சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்தியது தெரியவந்துள்ளது. ஆனால் காவல்துறை அளித்துள்ள விளக்களித்தன்படி, "இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. நாக்கை வெட்டிக்கொள்ள, ராஜேஷ்வர் நிஷாத் பயன்படுத்திய கத்தியை மீட்டுள்ளோம். இந்த சம்பவம் மூடநம்பிக்கையின் காரணமாக நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
Read More: T20 World Cup : டி20 உலகக் கோப்பை தொடரை இலவசமாக பார்க்கலாம் – ஹாட்ஸ்டார் அறிவிப்பு!