முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டில் கொளுத்தப்போகும் வெயில்..!! வெளியில் போகும்போது ஜாக்கிரதை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

07:52 AM Feb 16, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலையானது இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

நாளை முதல் (பிப்ரவரி 17) முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸையாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாகவும், மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
சென்னைதமிழ்நாடுவானிலை ஆய்வு மையம்வெப்பநிலைவெயில்
Advertisement
Next Article