For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு...!

06:00 AM Dec 13, 2023 IST | 1newsnationuser2
தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு
Advertisement

தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.

மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Advertisement

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுரைகளின்படி, ‘மிக்ஜாம்’ புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, 11.12.2023 அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏற்கெனவே, 11.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் 11-ம் தேதி தொடங்க இருந்த தேர்வுகளை இன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement