முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆப்பு வைக்க புறப்பட்டார் ஆளுநர்..? டெல்லியை உற்று கவனிக்கும் திமுக..!! தமிழக அரசியலில் பரபரப்பு..!!

In a tense political environment, Governor RN Ravi left Delhi suddenly this morning.
09:11 AM Jun 26, 2024 IST | Chella
Advertisement

பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலையில் திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

Advertisement

தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்ட காலமாக வார்த்தை மோதல் இருந்து வருகிறது. பொது மேடைகளில் ஆளுநர் ஆர்என் ரவி திராவிட கருத்துகளை விமர்சனம் செய்வதும், சனாதன கருத்துகளை உயர்வாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 140-க்கும் அதிகமானவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து மக்கள் பலியானதற்கு பொறுப்பேற்று உள்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக, பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து கள்ளச்சாராய விவகாரம் பற்றி புகாரளித்தனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைவர்களும் ஆர்என் ரவியை சந்தித்து புகாரளித்தனர். இத்தகைய சூழலில் தான் இன்று காலையில் தனது உதவியாளர் மற்றும் பாதுகாவலர்களுடன் ஆளுநர் ஆர்என் ரவி சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

டெல்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பலி ஏற்பட்டது தொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவி விவாதிக்க உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கள்ளச்சாராய பலி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்ட நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி இன்றைய பயணத்தின்போது அதுபற்றி உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆளுநர் ஆர்என் ரவியின் இன்றைய டெல்லி பயணம் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

Read More : குலதெய்வத்திடம் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! மிகப்பெரிய ஆபத்து வரும்..!!

Tags :
அண்ணாமலைஆளுநர் ஆர்.என்.ரவிஎடப்பாடி பழனிசாமிகள்ளக்குறிச்சிகள்ளச்சாராயம்முதல்வர் முக.ஸ்டாலின்
Advertisement
Next Article