For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

02:22 PM Nov 06, 2023 IST | 1newsnationuser6
மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது     சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Advertisement

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதிப்பதாகவும் சட்டப்பேரவையை கூட்டுவதற்கே ஆளுநர் முட்டுக்கு கட்டையாக இருப்பதாகவும் அரசு சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், கடந்த முறை பஞ்சாப் சட்டப்பேரவை கூடியபோது நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்றும் அந்த மசோதாக்களில் நிதி மசோதாவும் அடங்கும் என்று வாதிட்டுள்ள பஞ்சாப் அரசு, பஞ்சாபை போல தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா அரசுகளும் ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா? அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த பிறகு ஆளுநர்கள் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்.

ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன்னர், அம்மசோதாவை ஆய்வு செய்யவும் அதுவரை அதை நிறுத்தி வைக்கவும் அதிகாரம் உள்ளது. மசோதா விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் ஆளுநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement