For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீங்கள் BC, MBC-யா? அரசு தரும் ரூ 3 லட்சம் மானியம்..!! எப்படி விண்ணப்பிப்பது?

The government of Tamil Nadu has announced that the backward classes, very backward classes and poor people can apply for a subsidy of Rs 3 lakh.
10:45 AM Sep 05, 2024 IST | Mari Thangam
நீங்கள் bc  mbc யா  அரசு தரும் ரூ 3 லட்சம் மானியம்     எப்படி விண்ணப்பிப்பது
Advertisement

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ரூ 3 லட்சம் மானியத்தை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.

பெண்களுக்கு 50 ஆயிரம் மானியம்

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக ரூ 50 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த துறை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் முக்கியமாக 200 பயனாளிகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் வழங்க ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவை கடைகள் போன்ற சுய தொழில் செய்ய உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சமூக நல ஆணையர், ஆதரவற்ற மகளிர் நலவாரிய வங்கிக்கணக்கில் ரூ.1.61 கோடி இருப்பதாகவும், இதில் மானியம் வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை செலவு செய்ய அனுமதியளிக்க கோரிய நிலையில், தமிழக அரசு ரூ.1 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த மானியத்தை பெற, வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்த மானியத்தை 25 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இந்த மானியத்தை ஒரு முறை மட்டுமே தகுதியுடையவர் ஆவார். கைம்பெண்கள், நலிவுற்றவர், ஆதரவற்றவர் உள்ளிட்டோருக்கு மட்டுமே கிடைக்கும்.

தேவையான சான்றிதழ் :

இந்த மானியத்தை பெற பிறப்பு சான்று, வருவாய் சான்று , குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வசிப்பிட முகவரிக்கான சான்று உள்ளிட்டவை தேவைப்படும்.

Read more ; நாளைக்கு விட்டா அவ்வளவு தான்.. பத்திர ஆபிஸ் போக போறீங்களா..?இதை நோட் பண்ணுங்க

Tags :
Advertisement