விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்.. தமிழக அரசு அசத்தல்..!! - எப்படி விண்ணப்பிப்பது?
பெண்கள் விவசாயம் தொடர்பாக நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் உதவித் தொகை வழங்கும் விதமாக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி பெண்கள் விவசாயம் நிலம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கழகம் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலியிருந்து பயனாளிகளுக்கு 6 % மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் ;
* நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் கீழ் நிலம் வாங்க விரும்பும் பெண்கள் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். அதே போல அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் பெண்கள் சொந்தமாக நிலம் வைத்திருக்க கூடாது. அதே போல பெண்களின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும்.
* இந்த திட்டத்தின் கீழ் நஞ்சை நிலமாக இருப்பின் 2.5 ஏக்கமும் புஞ்சை நிலமாக இருப்பின் 5 ஏக்கரும் வாங்கிக் கொள்ளலாம். அதே போல இந்த திட்டத்தின் நிலம் வாங்கும் பொழுது நிலத்தின் அளவு நஞ்சை நிலத்திற்கு 2.5 ஏக்கர் அளவுக்குள்ளும், புஞ்சை நிலத்திற்கு 5 ஏக்கர் அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.
* இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்தின் மதிப்பு சந்தை மதிப்பீட்டின் படி நிர்ணயம் செய்யப்படும்.
* இந்த திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்குபவர்களுக்கு முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
* நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் மூலமாக வாங்கப்படும் நிலத்தை பத்து ஆண்டுகள் வரை விற்பனை செய்யக் கூடாது.
* விவசாய நிலம் வாங்கும் பொழுது சந்தை மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியம் அல்லது 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
* நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் மூலமாக நிலம் வாங்க விரும்பும் பெண்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலமாக கடன் பெற்று பின்னர் நிலம் வாங்கிக் கொள்ளலாம்.
திமுக தலைமையிலான தமிழக அரசு தற்பொழுது பெண்களின் முன்னேற்றத்திற்காக பல வகையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பெண்கள் நிலம் வாங்குவதற்காக தமிழக அரசு தற்பொழுது நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
Read more ; ஷாக்..! Samsung Galaxy Buds FE வெடித்து, பெண்ணிற்கு செவிதிறன் பாதிப்பு..!! – இயர்பட்ஸ் வெடிக்க என்ன காரணம்?