முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீடு கட்டும் கனவை எளிதாக்கிய அரசு..!! இனி உடனடி அனுமதி..!! தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!!

In order to facilitate the dream of building a house for the middle class, Chief Minister M.K.Stalin launched a scheme to get immediate approval for building a house by applying online.
04:01 PM Jul 22, 2024 IST | Chella
Advertisement

நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்கும் வகையில், வீடு கட்ட ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து உடனடி அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Advertisement

சொந்தமாக வீடு கட்டுவது என்பது ஏழை எளிய, நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் கனவாக உள்ளது. அவ்வாறு வீடு கட்டும்போது அதற்கான கட்டட அனுமதி பெற அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய சூழல் இருக்கிறது. இந்நிலையில், சிறிய அளவில் வீடு கட்டுபவர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது.

இத்திட்டத்தின்படி 3500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் வீடுகள் உடனடி அனுமதியை பெற முடியும். https://www.onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வீடு கட்ட அனுமதி பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் விவரங்கள் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்கப்படும். இதற்காக எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையத் தேவையில்லை. இந்த ஆன்லைன் அனுமதி பெறுபவர்களுக்கு, கட்டட பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதற்கு பரிசீலனை கட்டணம், கட்டமைப்பு, வசதி கட்டணங்களில் இருந்தும் 100 விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு கட்டும் முயற்சியில் உள்ள ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : ”அரசு ஊழியர்கள் இனி டவுசர் அணிந்து கொண்டு வரலாம்”..!! மத்திய அரசு போட்ட உத்தரவு..!! காங்கிரஸ் கடும் விமர்சனம்..!!

Tags :
mk stalinstalin
Advertisement
Next Article