தரமான உணவு எது என்று சான்றளிக்கும் அதிகாரம் அரசிடமே உள்ளது...! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...!
மக்கள் உண்பதற்கான தரமான உணவு எது என்று சான்றளிக்கும் அதிகாரம் அரசிடமே உள்ளது. அரசு சாரா நிறுவனங்கள் அதைச் செய்வது சரியல்ல என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்; மக்கள் உண்பதற்கான தரமான உணவு எது என்று சான்றளிக்கும் அதிகாரம் அரசிடமே உள்ளது. அரசு சாரா நிறுவனங்கள் அதைச் செய்வது சரியல்ல. உணவின் தரத்தை சோதனை செய்வது அரசின் வேலை. மத்திய அரசின் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உள்ளது.
ஹலால் சான்றிதழுடன் உணவுப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு உத்தரபிரதேச அரசு தடை விதிப்பு செய்தவிவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். மேலும் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக, அரசு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அட்டவணைப்படி, ஒவ்வொரு விமானமும் இந்தியா வந்ததாக அவர் கூறினார்.