திருமணம் செய்ய விரும்பினால் பன்றி ரத்தம் குடிக்கனும்..!! அதுமட்டுமா..?? - விநோத சடங்கை பின்பற்றும் பழங்குடி மக்கள்!
இந்தியாவில் வாழ்ந்து வரும் பலவகையான பழங்குடியினர் தொன்றுதொட்டு அவர்களின் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வியல், அவர்களின் சம்பிரதாயங்கள், திருமண முறை, அன்றாட வாழ்க்கை முறை என அனைத்தும் முற்றிலும் நம்மில் இருந்து வேறுபட்டிருக்கும். அந்தவகையில், உலகின் மிகவும் பழமையான பழங்குடியினராக கருதப்படும் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வாழும் கோண்ட் இன பழங்குடியின மக்கள், திருமணத்திற்கு ஒரு விசித்திரமான சடங்கை பின்பற்றி வருகின்றனர்.
ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பினால், முதலில் அந்த மணமகன் மாமனாரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டுமாம். அதாவது மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் இறங்கி வேலைசெய்ய வேண்டும், பையன் உண்மையிலேயே கடின உழைப்பாளிதான் என்று தோன்றினால் மட்டுமே அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பார்களாம். அதே போல் “என் மகளுக்காக பையன் எதை வேண்டுமானாலும் செய்வான்” என்பதை நிரூபிக்க பன்றியின் பச்சை ரத்தத்தை அப்டியே குடிக்க சொல்வார்களாம். இந்த பலப்பரீட்சைகளில் மாமனாரின் மனம் கவர்ந்தால் மட்டுமே திருமணம் நடைபெறுமாம்.
Read more ; JOBS | டிகிரி முடிச்சிருக்கீங்களா? இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!