முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சோப் மீது கால் வைத்த பெண்..!! வழுக்கி விழுந்து அந்தரத்தில் தொங்கிய அதிர்ச்சி வீடியோ..!! கோமா நிலையில் தீவிர சிகிச்சை..!!

The woman who fell from the floor after stepping on the soap is being treated in the hospital in a coma. The related video is going viral on social media.
04:43 PM Jun 22, 2024 IST | Chella
Advertisement

சோப் மீது கால் வைத்ததால் மாடியில் இருந்து தவறி விழுந்த பெண், கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூரு டி.ஜே.ஹள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கனக நகரை சேர்ந்தவர் ரூபா (27). இவர், தனது கணவருடன் வீட்டின் மொட்டை மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மாடியில் கிடந்த சோப் மீது ரூபா கால் வைத்துள்ளார். இதனால், கால் வழுக்கி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த அவர், கட்டடத்தின் சுவரை பிடித்தபடி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த கணவர், உடனே ஓடிச்சென்று மனைவி ரூபாவின் கைகளை பிடித்து கொண்டார். இதனால் ரூபா, மொட்டை மாடியின் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து, இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரது கை நழுவி ரூபா கீழே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த மக்கள் உடனடியாக ரூபாவை மீட்டு ஆட்டோ மூலம் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கோமா நிலையில் ரூபா சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே ரூபா மொட்டை மாடியில் இருந்து தவறி விழுவது மற்றும் அந்தரத்தில் தொங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ‘அடுத்த 20 நாட்களுக்குள் புதிதாக 4 மாநகராட்சிகள்’..!! சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு..!!

Tags :
bangaloreKarnatakasoapviral video
Advertisement
Next Article