For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கெஞ்சிய காதலன்..!! 11ஆம் வகுப்பு மாணவி செய்த காரியத்தை பாருங்க..!! அதிர்ச்சி ஆபாச வீடியோ..!!

A young man has been arrested in Bokso for threatening to publish a nude video of a girl he fell in love with on social media through Instagram.
04:19 PM Jun 28, 2024 IST | Chella
கெஞ்சிய காதலன்     11ஆம் வகுப்பு மாணவி செய்த காரியத்தை பாருங்க     அதிர்ச்சி ஆபாச வீடியோ
Advertisement

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த சிறுமியின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Advertisement

கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவருக்கும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகி வந்த இருவரும், பின்னர் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். இதற்கிடையே, சிறுமியை பேசி மயக்கிய விக்னேஷ், ஆபாச வீடியோவை எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். முதலில் மறுத்த அந்த சிறுமி, காதலன் கெஞ்சியது மட்டுமல்லாமல் வீடியோவை பார்த்த உடனே டெலிட் செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்ட விக்னேஷ் சில நாள் கழித்து தனியாக ஒரு இடத்திற்கு வர வேண்டும், இல்லையென்றால் உனது நிர்வாண வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி தனது தாய் மற்றும் தந்தையிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விக்னேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பத்திரப் பதிவுத்துறையில் இப்படி ஒரு வசதியா..? எல்லாம் முடிஞ்சு மறுநாளே..!! சூப்பர் அறிவிப்பு..!!

Tags :
Advertisement