காதலித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை..!! பொங்கி எழுந்த தாய்..!! ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை..!! மருத்துவமனையில் நாடகமாடியது அம்பலம்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (25) என்பவர், சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் தினேஷ், ஆதித்யா ஷிண்டே ஆகியோர் பாலாஜி விபத்தில் சிக்கியதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலாஜி கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் ஆட்டோ டிரைவர்கள் தினேஷ், ஆதித்யா ஆகியோரை காவல்நிலையம் அழைத்து வந்த விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது. விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாலாஜி, தனது காதலியான சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால், அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய் ரேகா, பாலாஜியை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். கடந்த 17ஆம் தேதி சிறுமியின் வீட்டிற்கு வந்த பாலாஜியை ரேகா தனது கூட்டாளிகளான ஆட்டோ ஓட்டுநர்கள் தினேஷ், ஆதித்யா ஷிண்டே ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.
இதில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலாஜியை, மருத்துவமனையில் இவர்களே அனுமதித்து விபத்து போல் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிறுமியின் தாய், ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை கைது கைது செய்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.