100 எம்பிக்களின் ஆட்டம் முடிகிறது..!! இனி புதிய வேட்பாளர்கள்..!! பாஜக தலைமை எடுக்கப்போகும் முடிவு..!!
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால், பாஜகவின் வெற்றிக்கு தடை போட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ‛இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்துள்ளன.
தற்போதைய சூழலில் தேசிய அரசியல் என்பது பாஜகவின் என்டிஏ கூட்டணி மற்றும் ‛இந்தியா’ கூட்டணி என்ற அடிப்படையில் இருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு மாநிலங்களிலும் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணியில் இணையாத கட்சிகளும் களத்தில் இருக்கின்றன. தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 4 முனை போட்டி என்பது உருவாகலாம். அதாவது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற அடிப்படையில் போட்டி என்பது நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 75 வயதை கடந்த மற்றும் சரியாக செயல்படாத 100 எம்பி-க்களை ஓரங்கட்ட பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் தோல்வியடைந்த 9 எம்பிக்கள், மக்கள் அதிருப்தியில் உள்ள எம்பிக்களை நீக்கிவிட்டு புதிய வேட்பாளர்களை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.