Breaking: நெருக்கடி காரணமாக பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது...!
அரசியல் நெருக்கடி காரணமாக பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது.
பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அரசாங்கம் கவிழ்ந்தது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும் இடது மற்றும் தீவிர வலதுசாரிகள் உட்பட பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 574 பேர்களில் 331 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2025 ஆம் ஆண்டிற்கான பிரதமர் மிஷெல் பார்னியேரின் முன்மொழியப்பட்ட சமூகப் பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு கடுமையான எதிர்ப்பு உருவான நிலையிலேயே நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் மிஷெல் பார்னியேரின் அரசாங்கம் கவிழ்ந்துள்ளது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது அத்தோடு தற்போது மேக்ரான் புதிய பிரதமரை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் பிரதமர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கட்சிகள் நிறைவேற்றினர், பிரதமர் மைக்கேல் பார்னியரும் அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினர்-இது 1962 க்குப் பிறகு முதல் முறையாகும். வரவு செலவுத் திட்ட சர்ச்சைகளால் இந்த நடவடிக்கையில் தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரிகள் ஒன்றிணைந்து, ஐரோப்பிய அரசை வீழ்த்தியது. யூனியனின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது.