முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகிழ்ச்சி...! இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும்..! பிரதமர் மோடி அறிவிப்பு...!

10:21 AM Apr 14, 2024 IST | Vignesh
Advertisement

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

Advertisement

பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். Modi's guarantee 2024 என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

25 கோடி ஏழைகளை ஏழ்மையிலிருந்து தனது தலைமையிலான அரசு மீட்டெடுத்திருக்கிறது என பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் என பிரதமர் மோடி அறிவித்தார். நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும். 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை. 2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.

Tags :
Bjp manifestoElection newsmodi
Advertisement
Next Article