அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம்!. படகிலேயே குழந்தையை பெற்றெடுத்த பெண்!. நெகிழ்ச்சி!
Flood: அசாமை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் கடும் வெள்ளத்திற்கு மத்தியில் கர்ப்பிணி ஒருவர் மீட்பு படகிலேயே குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கடும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. அதாவது, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 16 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, இருப்பிடம் இல்லாமல் ஆங்காங்கே மக்கள் பெரும் துயரில் உள்ளனர். மீட்பு குழுவினர் மக்களை படகு மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், அசாமின் மோரிகான் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான ஜஹானாரா கட்டூன். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றின் வெள்ளப்பெருக்கின் நடுவே, சுகாதார மையத்திற்கு செல்லும் வழியில் படகில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவியுடன் படகிலேயே ஜஹானாராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Readmore: யூரோ 2024!. இன்று காலிறுதி போட்டி!. ஸ்பெயின் – ஜெர்மனி அணிகள் மோதல்!