கர்நாடகாவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உருது மொழி கட்டாயம்..!! அரசின் முடிவினால் ஏற்படும் தாக்கம் என்ன?
கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆட்சேர்ப்புக்கு உருது மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அரசின் இந்த முடிவு கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. மாநிலத்தின் ஒரு பிரிவினரை அந்நியப்படுத்தும் முயற்சியாகவும், கர்நாடகத்தின் ஒருமைப்பாட்டை சேதப்படுத்தும் முயற்சியாகவும் இருப்பதாக குற்ற சாட்டுகள் எழுந்துள்ளது.
மொழி சர்ச்சை : அங்கன்வாடி ஆசிரியர் விண்ணப்பதாரர்களுக்கு உருது புலமையை கட்டாயமாக்கும் மாநில அரசின் அறிவிப்பால் இந்த சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடிகளில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முடிகெரே மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களில் முஸ்லீம் மக்கள் 31.94% வாழுகின்றனர். மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை விட, அரசியலுக்காக மதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது மாநிலத்தின் மொழி ஒற்றுமையை சீர்குலைக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மதத்தை சேர்ந்த மக்களுக்கு அதீத முன்னுரிமை, வேலைவாய்ப்பு கொடுக்கும் அவலத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் அரசின் இந்த முடிவு ஆபத்தானது. பலதரப்பட்ட மக்களுக்கு எதிரானது. என்று எதிர்கட்சிகள் குற்றசாட்டு முன்வைக்கின்றனர்.
முன்னாள் எம்பி நளின் குமார் கட்டீல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த நடவடிக்கையை முஸ்லிம் திருப்திப்படுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ளனர். சொந்த மாநிலத்தில் கன்னடம் பேசும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை மறுக்கும் மோசமான நடவடிக்கை இது என்று பாஜக விமர்சனம் வைத்துள்ளது.
மொழியியல் பெருமையின் வரலாற்றைக் கொண்ட மாநிலம் :
கர்நாடக அரசியலில் மொழிப் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பை அந்த மாநிலம் பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் கன்னட மொழிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உருது மொழி திணிக்கப்பட்டு உள்ளது. கன்னடத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் எதையும் அம்மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். நிலமை இப்படி இருக்க, கன்னடத்தை விட்டு, உருது மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவானது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் கூட, இந்த விவகாரம் கவலையை எழுப்புகிறது. கன்னட மக்கள் இடையே கடுமையான எதிர்ப்புகளை இந்த முடிவு சந்தித்துள்ளது.
மொழி ரீதியாக பிரிவினைவாதம் : கர்நாடகாவில் பல மொழிகள் உள்ளன.. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகள் பேசும் மக்கள் அங்கு இருக்கிறார்கள். அம்மாநிலம் அதன் மொழியியல் பன்முகத்தன்மையில் பெருமை கொள்கிறது. இப்படி பல மொழிகள் கொண்ட மாநிலத்தில் திடீரென உருது திணிக்கப்படுவது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆணை ஆபத்தான முன்னுதாரணமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அந்த வேலைக்கு நல்ல திறன் கொண்டவர்கள், அல்லது தகுதியுடையவர்கள் உருது மொழி தெரியாத காரணத்தால் வேலைக்கு சேர முடியாத நிலை ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே இந்த வேலையில் சேரும் சூழல் ஏற்படும். இந்த மாவட்டங்களில் உள்ள கணிசமான முஸ்லிம் மக்கள்தொகையை மட்டும் திருப்திப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மற்ற மக்கள் இடையே அதிர்ச்சியை, விமர்சனங்களை சந்தித்துள்ளது.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்த மொழி அவசியம்? அங்கன்வாடி பணியாளர்கள் அரசு திட்டங்களுக்கும் சமூகத்திற்கும் இடையே, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் இடையே மிகப்பெரிய இணைப்பு பாலமாக உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு உள்ளூர் மொழியான கன்னடம் அவசியம். அட்ந பணிக்கு உருது கட்டாயம் என்பது வேடிக்கையாக உள்ளது. முக்கியமாக அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை துண்டிக்கும் செயலாகும் இது.
சிறுபான்மைச் சமூகங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்வது நோக்கமாக இருந்தாலும், அது மற்ற மக்களுக்கு பிரச்சனையாக மாறும் என்பதை கூட யோசிக்காமல் இந்த முடிவை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது. எல்லோரும் அரசால் பயன் அடைய வேண்டும் என்றால். கன்னடத்தில் புலமை முதன்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இஸ்லாமியர்கள் மட்டும் பயன் அடையும் வகையில் உருதுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அரசின் முடிவு சரியா? சிறுபான்மைச் சமூகங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்வது நோக்கமாக இருந்தாலும், அது மற்ற மக்களுக்கு பிரச்சனையாக மாறும் என்பதை கூட யோசிக்காமல் இந்த முடிவை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது. சிந்தனையற்ற கொள்கை. கன்னடத்தை விட சிறுபான்மை மொழிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், காங்கிரஸ் அரசாங்கம் அதன் பெரும்பான்மையான மக்களை அந்நியப்படுத்தும் முடிவை எடுத்து உள்ளது. மொழிவாரித் திணிப்பை தொடர்ந்து எதிர்க்கும் மாநிலத்தில், இந்த முடிவு பிரிவினையை ஏற்படுத்துவது மட்டுமல்ல, ஆபத்தான விஷயமாகவும் மாறலாம். மொழியியல் பெருமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட கர்நாடகாவை பின்னோக்கி கொண்டு செல்லும் நடவடிக்கை இது.
Read more ; ஆயுளை நீட்டிக்கும் ‘ராபமைசின்’ மாத்திரைகள் பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?