40 வயசு ஆயிடுச்சா.? அப்போ இந்த ஐந்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அவசியம் .!
40 வயதிற்கு மேல் ஆண் பெண் இருபாலரும் முறையான உணவு கட்டுப்பாடு மற்றும் சரியான ஓய்வை பின்பற்றுவதன் மூலம் நோய் நொடியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உதவும். குறிப்பாக பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த வயதில் அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவு முறைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
40 வயதிருக்கும் மேல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்துக்கள் நம் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கும் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் கிடைப்பதற்கும் உதவுகிறது. புரோட்டின் அனைத்து வயதினருக்கும் சிறந்த உணவு என்றாலும் 40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் புரோட்டினை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலின் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 40 வயதிற்கு மேல் செல்களில் ஏற்படும் மாற்றங்களை கட்டுப்படுத்த வைட்டமின் பி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானதாகும். இயற்கையாகவே 40 வயதுக்கு மேல் தாண்டினால் கைகால் வலி மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. இவை வராமல் தடுக்க உணவில் கால்சியம் ஊட்டச்சத்துக் கொண்ட உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு 40 வயதை தாண்டினால் ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வைட்டமின் டி சத்துள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை கட்டுப்படுத்துகிறது.