"இப்படி ஒரு படத்தை என் வாழ்நாளில் பார்க்கல..!!" டிமாண்டி காலனி 2 படத்தின் முதல் விமர்சனம்..!! வொர்த்தா? இல்லையா?
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'டிமான்டி காலனி' பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த தயாரிப்பாளர் ஒருவர் படத்தின் முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
டிமான்டி காலனி 2:
கோப்ரா படத்தின் தோல்விக்கு பின்னர் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த அஜய் ஞானமுத்து, தற்போது டிமாண்டி கலானி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைந்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்தது.
முதல் விமர்சனம்:
இந்நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த விநியோகஸ்தர் ஒருவர், படத்தின் முதல் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வாவ்... டிமாண்டி காலனி 2 என்ன ஒரு அருமையான திரைக்கதை, ஆகஸ்ட் 15ந் தேதி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அஜய் ஞானமுத்துவின் திரைக்கதையை பற்றி தான் பேசப்போகிறார்கள்.
மகாராஜாவுக்கு பின் டிமாண்டி காலனி 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியதில் நாங்கள் மிகவும் லக்கி என குறிப்பிட்டுள்ளார். படம் பார்த்த மற்றொருவர், டிமாண்டி காலனி 2 மாதிரி ஒரு பேய் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இரண்டரை மணிநேரமும் என் போனை நான் எடுக்கவில்லை, சீட் நுனியில் அமர்ந்து தான் படம் பார்த்தேன் என்று பகிர்ந்துள்ளார்.
ஆகஸ்ட் 15ந் தேதி சுகந்திர தினத்தை முன்னிட்டு பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படமும், கீர்த்தி சுரேஷின் ரகு தாதா திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்துடன் டிமாண்டி காலனி 2 வெளியாக உள்ளது. இதில் எந்த படம் வசூலில் மாஸ் காட்டப்போகிறதுபாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்ப உள்ளது என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.
Read more ; மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் இல்லம் தேடிக் கல்வி..!! நீங்களும் இணைய ஆர்வமா? – முழு விவரம் இதோ..