’முதல்வரே’..!! ’உடனே ராஜினாமா செய்யுங்கள்’..!! ’உயிரிழப்புக்கு காரணமே இதுதான்’..!! சீறிய எடப்பாடி பழனிசாமி..!!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
இன்று முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், கள்ளச்சாராய பலி விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சட்டசபையில் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுக்க எதிர்க்கட்சியான அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இன்று சட்டசபைக்கு செல்லாமல் கள்ளக்குறிச்சிக்கு விரைந்தார்.
அங்கு சென்று பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலம் விசாரித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”கள்ளச்சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. நீதிமன்றமும் உள்ளது.
அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. இதற்குப் பின்னால் மிகப்பெரிய கும்பல் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் விட்டதே உயிரிழப்புக்கு காரணம்" எனக் குற்றம்சாட்டினார்.