முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2025ன் முதல் சட்டப்பேரவை கூட்டம்.. எதிர்பார்ப்பை கிளப்பும் ஆளுநர் உரை..!!

The first assembly session of 2025 will be held today. Assembly session to be held with Governor's address.
09:24 AM Jan 06, 2025 IST | Mari Thangam
Advertisement

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு என்பதால், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார். 2023-இல் ஆளுநர் உரைக்குப் பின்னர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறியது விவாதமான நிலையில், கடந்த ஆண்டு ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்காமல், 4 நிமிடங்களில் முடித்தார்.

Advertisement

இதற்காக ஆளுநர் மீது சட்டப்பேரவையிலேயே பல்வேறு எதிர்வினைகளை தமிழக அரசு செய்திருந்தது. இதனால் ஆளுநர் பாதியிலேயே உரையை முடித்துக் கொண்டு சட்டப்பேரவையில் இருந்து கிளம்பிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் உரையை அப்படியே வாசிப்பாரா? உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இன்று சட்டப்பேரவை கூடுகிறது. மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், அவை நடவடிக்கைகள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more ; முதல்வர் நிகழ்ச்சியில் வெடித்த சர்ச்சை..!! கருப்பு நிற துப்பட்டாவை வாங்கி வைத்தது ஏன்..? காவல்துறை பரபரப்பு விளக்கம்..!!

Tags :
Assembly sessionassembly session of 2025governor
Advertisement
Next Article