முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தவெக தலைவர் "விஜய்" பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சோகம்..! சிறுவனின் கைகளில் தீப்பிடித்தது..! அதிர்ச்சிக் காட்சிகள் வெளியீடு..!

The fire in the hand of a boy during the public celebration of Vijay's birthday has created a stir.
11:56 AM Jun 22, 2024 IST | Mari Thangam
Advertisement

விஜய் பிறந்த நாள் கொண்டாடத்தின் பொது சிறுவனின் கையில் தீ பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் பிறந்த நாளை ஒரு திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்தது. அதேபோல் இந்த ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டனர் என்பதும் ஏற்கனவே அவர் நடித்து ஹிட்டான சில படங்கள் இன்று ரிலீஸ் ஆவதை அடுத்து அந்த படங்களை பார்த்து கொண்டாட திட்டமிட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 க்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனே  கள்ளக்குறிச்சி சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்தார் தவெக தலைவர் விஜய்.  அதனைத்தொடர்ந்து, பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்நிலையில் விஜய் பிறந்த நாள் முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் நீலாங்கரையில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது சாகசம் செய்ய முயன்ற சிறுவரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Read more ; வீட்டுக் கடன் வாங்கிவிட்டால் தனிநபர் கடன் கிடைக்காதா? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
#chennaiactor vijaycelebration of Vijay's birthdaytamilaga vetri kalagam
Advertisement
Next Article