தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு முடிவுகள் வெளியீடு...! எப்படி பார்ப்பது...?
தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு (I), 2024 –ன் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ராணுவத்தில் சேர்வதற்காக மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் 2024 ஏப்ரல் 21 அன்று நடத்திய தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமியின் படிப்புகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 641 பேரின் இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட படிப்புகள் தொடங்கும் தேதி குறித்த விரிவான தகவல்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளங்களான www.joinindianarmy.nic.in, www.joinindiannavy.gov.in மற்றும் www.careerindianairforce.cdac.in ஐப் பார்வையிடவும்.
இந்தப் பட்டியல்கள் தயாரிப்பதில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.தேர்ச்சி பெற்றவர்கள் தேவையான சான்றிதழ்களை நேரடியாக கூடுதல் பணியாளர் தேர்வு இயக்குநரகம், பாதுகாப்பு அமைச்சகம் (ராணுவம்), மேற்கு பிளாக் எண் 3, பிரிவு -1, ஆர்.கே.புரம், புதுதில்லி -110066-க்கு சமர்ப்பிக்க வேண்டும்.முகவரியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக மேற்கண்ட முகவரிக்கு நேரடியாக ராணுவ தலைமையகத்திற்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு முடிவுகளை https:// www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம். இறுதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பிறகு விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.