முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இன்னும் படமே ரிலீஸ் ஆகல’..!! ரூ.1,000 கோடி கிளப்பில் இணைந்து சாதனை..!! எந்த படம் தெரியுமா..?

05:16 PM Apr 15, 2024 IST | Chella
Advertisement

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு படம் 100 கோடி வசூல் செய்தாலே அது வெற்றிப் படமாக பார்க்கப்பட்டது. அதாவது உள்நாட்டில் ரூ.100 கோடி வசூல் செய்தாலே அது 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும். பெரிய நடிகர்களின் படங்கள் கூட அப்படி தான். ஆனால் இப்போது, பெரிய பட்ஜெட் படங்களின் வெற்றியின் உண்மையான அளவுகோல் 1000 கோடி கிளப்பில் நுழைவதுதான் என்று சிலர் கூறிவருகின்றனர். உள்நாட்டு நிகர பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் 100 கோடி கிளப்பைப் போல் அல்லாமல், 1000 கோடி என்பது ஒரு படத்தின் மொத்த உலகளாவிய வசூலை நிர்ணயிக்கிறது.

Advertisement

அதாவது, ஆமீர் கானின் தங்கல் படம் உள்நாட்டில் ரூ.387 கோடி வசூல் செய்துள்ள நிலையில், உலகளவில் ரூ.2000 கோடி வசூலித்துள்ளது. பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டும் இந்தியாவில் சுமார் ரூ. 500-600 கோடி வசூல் செய்தது. ஆனால் உலகளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்தது. அந்த வகையில் சில சமயங்களில், ப்ரீ-ரிலீஸ் பிசினஸில் மட்டும் இந்தத் தொகையை வசூலிக்கும் திரைப்படங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் வாதிடுகின்றனர். ஆனால், ரிலீஸுக்கு முன்பே ஒரு படம் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்துவிட்டது. ஆம். புஷ்பா 2 தான் அந்த படம்.

புஷ்பா 2 தி ரூல் என்பது 2024ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படமாகும்., 2021ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் புஷ்பா: தி ரைஸ் படத்தின் இரண்டாம் பாகமான இப்படம், 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு படத்தின் ப்ரீ ரிலீஸ் உரிமை கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புஷ்பா 1 வட இந்தியாவிலும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் என்பதால், இந்தி பெல்ட்டில் விநியோக உரிமை கணிசமாக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, புஷ்பா 2 படத்தின், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஏற்கனவே ரூ.1000 கோடியைத் தாண்டிவிட்டதாக வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன. புஷ்பா 2 வெளிவர இன்னும் 4 மாதங்கள் உள்ளன. புஷ்பாவின் மொத்த ப்ரீ-ரிலீஸ் பிசினஸ், பதான், கதார் 2 மற்றும் அனிமல் போன்ற பிளாக்பஸ்டர்களின் உலகளாவிய மொத்த வசூலை விட அதிகம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கல்கி 2898 AD மற்றும் கங்குவா போன்ற பிரம்மாண்ட பான்-இந்தியப் படங்களையும் புஷ்பா 2 முறியடித்துள்ளது.

Read More : அடடே..!! இது உங்களுக்கு தெரியுமா..? வெறும் ரூ.150 இருந்தால் விமானத்தில் பயணிக்கலாம்..!!

Advertisement
Next Article