சிரியாவின் வீழ்ச்சி!. 3ம் உலக போரைத் தூண்டும்!. பாபா வங்கா கணிப்பு!
Baba Vanga: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், ரஷ்யா-உக்ரைன் போர் பதட்டங்களுக்கு மத்தியில் சிரியாவின் வீழ்ச்சி உலகளாவிய போரை தூண்டும் என்று தீர்க்கதரிசியான பாபா வங்கா கணித்துள்ளார்.
உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.
எனவே, ஒவ்வொரு வருடமும் பிறப்பதற்கு முன்பு அந்த ஆண்டில் என்ன மாதிரியான நல்லது, கெட்டது நடக்கும் என்பது பற்றி பாபா வங்காவின் கணிப்புகளை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர். அந்தவகையில் இன்னும் சில நாட்களில் 2025ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்நிலையில், வரும் 2025ஆம் ஆண்டில் சிரியாவின் வீழ்ச்சி உலகளாவிய போரை தூண்டும் என்று கணித்துள்ளார்.
1000 ஆண்டுகளை கடந்த இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல், ரஷ்யா - உக்ரைன் போர் உலகளவில் பெரும் இழப்புகளை சந்தித்தது. இதையடுத்து, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் ஒப்பந்தங்களும் போடப்பட்டது. இருப்பினும், இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரும் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அந்தவகையில் தற்போது சிரிய தலைநகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால், அதிபர் ஆசாத் தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக சிரியா கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சமீபத்தில், ஒரு புதிய கிளர்ச்சிக் கூட்டணி, அலெப்போவை வெற்றிகரமாகக் கைப்பற்றி தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து, பாபா வாங்காவின் கணிப்பு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. "சிரியா வீழ்ச்சியடையும் போது, மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போர் வரும். வசந்த காலத்தில், கிழக்கில் ஒரு மோதல் வெடிக்கும், இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் - இது மேற்கத்தை அழிக்கும் ஒரு போர்." அவரது தீர்க்கதரிசனத்தின் மற்றொரு பகுதி, "சிரியா வெற்றியாளரின் காலில் விழும், ஆனால் வெற்றியாளர் ஒருவராக இருக்க மாட்டார்" என்று கணித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் ஐரோப்பாவில் அதிகரித்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எச்சரித்தது மற்றும் ஒரு "பெரிய நாடு" உயிரியல் ஆயுத சோதனைகள் அல்லது தாக்குதல்களை நடத்தும் என்று பரிந்துரைத்தது.இந்த ஆண்டு பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்று பாபா வங்கா முன்னறிவித்தார். "எஃகு பறவைகள்" அமெரிக்காவை தாக்கும் என்று பாபா வங்கா கணித்ததாக கூறப்படுகிறது, இது நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரங்கள் மீதான 9/11 தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் என்று பலர் நம்புகிறார்கள்.