ஜம்மு-காஷ்மீர் | பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் CRPF வீரர் பலி..!!
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிஆர்பிஎஃப் ஜவான் இன்ஸ்பெக்டர் குல்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "பிற்பகல் 3:30 மணியளவில் ஜேகேபி எஸ்ஓஜி குழுவுடன் சிஆர்பிஎஃப் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது சிஆபிஎஃப் வீரர் கொல்லப்பட்டார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள்
முன்னதாக ஆகஸ்ட் 13 அன்று, உதம்பூரின் பாட்னிடாப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே என்கவுன்டர் நடந்தது. இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் உள்ள தொலைதூர வனப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இரண்டு என்கவுன்டர்கள் நடந்தன. கிஷ்த்வாரில் நடந்த என்கவுன்டர், பதார் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மச்சயில் மாதா யாத்திரையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் தொடங்கிய சிறிது கால அமைதிக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைதூக்கியுள்ளன. 2021 ஆம் ஆண்டு முதல் ஜம்மு பகுதியில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் 52 பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட இந்திய ராணுவத்தை சேர்ந்த 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Read more ; உங்க மின்சார இணைப்பு துண்டிக்கப்படும்..!! இந்த மாதிரி SMS வந்தா.. எச்சரிக்கை!!!