முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இரட்டை இலை சின்னம் முடக்கமா? ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்..!! - தேர்தல் ஆணையம்

The Election Commission of India has responded in the Chennai High Court that an order will be issued within a week on the petition to disable the double leaf symbol.
01:07 PM Nov 25, 2024 IST | Mari Thangam
Advertisement

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

Advertisement

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், ஒரு வாரத்தில் இந்த விண்ணப்பம் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை வரும் டிசம்பர் 2 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Read more ; பெற்றோர் இறந்ததாக போலி ஆவணம்.. சொத்தை அபகரிக்க இப்படி கூடவா செய்வாங்க? பாசக்கார மகள் கைது..!!

Tags :
chennai high courtElection Commission of Indiaஅதிமுகஇரட்டை இலை
Advertisement
Next Article