தலைவர்கள் கொலை எதிரொலி!. போர் மூளும் அபாயம்!. போர்க்கப்பல்களை குவிக்கும் அமெரிக்கா!. உலகநாடுகள் அச்சம்!
Iran-Israel War: ஹமாஸ், ஹில்புல்லா அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டதையடுத்து, ஈரான் - இஸ்ரேல் நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உதவுவதாக போர்க்கப்பல்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பாலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்கர் பலியானார். இதற்கு அடுத்த நாளே ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனி படுகொலை செய்யப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு கடும் கொந்தளிப்புடன் இருக்கிறது.
காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முக்கிய நபராக இருந்தவர் ஹனியே. எனவே அவரது படுகொலைக்காக இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் காமனேயி சூளுரைத்திருந்தார். இதன் காரணமாக, ஈரான், இஸ்ரேல் இடையே போர் உருவாகும் நிலை அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் நேற்று உத்தரவிட்டுள்ளது.
Readmore: சற்றுமுன்…! வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 358 ஆக உயர்வு…! 200-க்கும் மேற்பட்டோர் காணவில்லை…!